பதிவு செய்த நாள்
16ஏப்2016
01:58
நான் தொழிற்சங்கத்தில் இருந்த நாட்களில், ஒருமுறை, ஒரு போராட்டத்துக்காக, ஒரு கோஷத்தை எழுதினோம். 'போனஸ் என்பது, பிடித்தம் செய்யப்பட்டு, மொத்தமாக அளிக்கப்படும்
சம்பளம் தான்' என்பது தான் என் கருத்து. கோஷங்களை எழுதும் மூத்த தோழர், ''போனஸ் என்பது லஞ்சமில்லை! தொழிலாளி மனதில் வஞ்சமில்லை!'' என்று எழுதினார்.நான், ''இந்த இரண்டு வரிகளுக்கும் நடுவே என்ன தொடர்பு?'' என்றேன். ''கோஷத்தில் ஒரு தாளம் இருக்க வேண்டும், இல்லையேல், தொழிலாளர்களால் அதை சொல்ல முடியாது. சொல்ல முடியாத ஒன்றை அவர்கள் நினைவில் வைத்துக்கொள்ள மாட்டார்கள்,'' என்றார் தோழர். அது தான் நடந்தது, அந்த வரி மிகப்பிரபலம் ஆகியது.
போராட்டங்களில், ஊர்வலங்களில் இப்படி சில கோஷங்கள் ஒலிப்பதை நாம் கேட்டிருப்போம். ஒரு கருத்தை தாளம் உள்ள வரியாக மாற்றி திரும்பத் திரும்பச் சொல்வது தான் அது. அந்த வரி, சொல்பவர் மனதில் பதிந்து, அவர் அதை நம்பத் தொடங்குகிறார். கேட்பவர் மனதிலும் அறியாமல் பதிந்து விடுகிறது.
ஹிட்லரின் பிரச்சார அமைச்சராக 1933 முதல் 1945 வரை இருந்த ஜோசப் கீபல்ஸ் என்பவர் தான் அரசியலில் திரும்பத் திரும்ப ஒலிக்கும் கோஷங்களின் இடத்தை அடையாளம் கண்டுகொண்டவர்.
'திரும்பத் திரும்பச் சொல்லப்படும் பொய் என்பது உண்மையே' என்ற அவரது வரி மிகவும் பிரபலம். அப்படி திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டுமென்றால், அதற்கு ஒரு தாளம் இருக்க வேண்டும். அதுவே கோஷம்.
அதற்கு முன், நெடுங்காலமாகவே, ராணுவத்தில் அத்தகைய கோஷங்களுக்கு முக்கியப் பங்கிருந்தது. ராணுவத்திற்கு போர் பற்றிய கருத்துக்களை எளிய கோஷங்களாக ஆக்கித்தான் அளிக்க வேண்டும். ஏனென்றால், ராணுவம் போர்முனையில் செயல்படுகிறது. அங்கே சிந்தனைக்கு இடமில்லை. அதே சமயம், எதன் பொருட்டு போரிடுகிறோமோ அதை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் உண்மையான தீவிரம் வரும். அதற்காகவே ராணுவத்தில் கோஷங்கள் எழுப்பப்படுகின்றன.
மிகத்தொன்மையான காலம் முதலே, போர் வீரர்கள், ''வாழ்க! ஒழிக!'' கோஷங்களை எழுப்பியபடி போருக்கு போவது வழக்கமாக இருந்ததை நாம் வரலாற்றில் காண்கிறோம்.
கீபல்ஸ், அதை நுணுக்கமாக ஆராய்ந்து, ஜனநாயகத்திற்கும் பயன்படுத்தலாம் என்று கண்டுபிடித்தார். எந்த சிந்தனைக்கும் இடமில்லாமல் ஒன்றை மக்கள் மனதில் நிறுவும் ஆற்றல் கோஷங்களுக்கு உண்டு. சிந்திக்காமல் மக்கள் நம்பும் விஷயங்களே அரசியலில் வெற்றியை தேடித்தரக் கூடியவை. சிந்திக்க வைக்கும் போது, எப்படியும் மறு தரப்பும் உருவாகி வரும் என்று கீபல்ஸ் சொன்னார்.
''தமிழகத்திலே தட்டினால் தங்கம். வெட்டினால் வெள்ளி. அத்தனையும் கொணர்ந்து மக்களின் வாட்டத்தை போக்குவோம்,'' என்று ஒரு கோஷம், ஒரு காலத்தில், தமிழகத்தில் மிக பிரபலம். தட்டினால் தங்கம், வெட்டினால் வெள்ளி என்று, அந்த எண்ணம் மக்கள் நாவில் பதிந்து விட்டது.
ஆனால், தமிழகம் நீர் வளத்திலும் கனிம வளத்திலும் பிற மாநிலங்களை விட மிக குறைவானது. நெய்வேலி தவிர நமக்கு நிலக்கரி சுரங்கங்கள் ஏதுமில்லை. தமிழகத்தில் எண்ணெய் கிடைப்பதில்லை. உலோகம் மிக குறைவாகத் தான்
கிடைக்கிறது.
அசாமிய எண்ணெயையும், பீஹாரின் நிலக்கரியையும், மஹாராஷ்டிரத்தின்
செம்பையும் நம்பி தான் இந்தியாவும்,
தமிழகமும் இருக்கிறது. இது தகவல் உண்மை.
ஆனால், தமிழகத்தை ஒருவர் புகழ்ந்து பேசும் போது, உண்மையா என்று பார்க்க நாம் மெனக்கெடுவதில்லை. அதை நம்ப நம் மனம் ஆசைப்படுகிறது. கைரேகை சோதிடர்கள் யாருடைய கையை பிடித்து பார்த்தாலும், 'நீங்கள் மிக நல்லவர். வெளுத்ததெல்லாம் பால் என்று நம்புகிறவர். மனதில் கள்ளமில்லாதவர். ஆனால், உங்களை மற்றவர்கள் ஏமாற்றுகிறார்கள். உங்கள் பணம் மற்றவர்களால் சுரண்டப்படுகிறது' என்று சொல்வார்கள். 'அதெல்லாமில்லை' என்று மறுக்கக்கூடிய ஒருவர் கூட இல்லை என்று, அவர்களுக்கு தெரியும்.
அந்த வித்தையைத் தான் இந்த கோஷத்திலும் பார்த்தோம். அதை மக்கள் நம்பியதற்கு ஒரு காரணம் இருந்தது. சுதந்திர போராட்ட காலத்தில், ஒரு நம்பிக்கை மக்களிடம் உருவாகியது. வெள்ளையன் ஆட்சி அகன்றால், இந்தியாவில் பாலாறும் தேனாறும் ஓடும் என்று. அது நடைமுறை சாத்தியம் அல்ல என்பதே உண்மை.
ஆனால், எளிய மக்கள் அப்படி ஒரு நல்ல எதிர்காலத்திற்கான மிகையான கனவுகளை வளர்த்துக் கொண்டு இருப்பார்கள். அது அவர்களுடைய இயல்பு.
சுதந்திரத்திற்கு பிறகு, வடமாநிலங்களில் பஞ்சம் வந்தமையால், இந்திய அளவில், ஒரு உணவு கட்டுப்பாட்டை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்தியா முழுக்க உணவு சேகரிக்கப்பட்டது.
அந்தந்த இடங்களில் குறைந்தபட்சம் எவ்வளவு தேவையோ அந்த அளவு வைக்கப்பட்டு, எஞ்சியிருந்த உணவு பஞ்சம் பிழைத்த பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. அவ்வாறுதான் இந்தியாவில் பஞ்சத்தில் மக்கள் எவரும் இறக்காமல் பார்த்துக் கொள்ளப்பட்டது.
இந்த உணவு கட்டுப்பாடு காரணமாக, தமிழகத்திலும், ஆந்திரத்திலும் போதிய விளைச்சல் இருந்தும் கூட, உணவு தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆகவே, ரேஷன் முறை கொண்டு வரப்பட்டது. குறைவாக அரிசி அளிக்கப்பட்டது. அரிசியுடன் சோளம், கம்பு போன்ற தானியங்களும் அளிக்கப்பட்டன. மக்களிடையே ரேஷன் முறை
கடுமையான கசப்பை உருவாக்கியது.
சுதந்திரத்துக்கு பிறகு முன்பிருந்த அளவு கூட தானியங்கள் கிடைக்கவில்லை என்ற எண்ணம் தென்மாநிலங்களில் உருவாகியது. நம் சகோதரர்கள் பீஹாரிலும், உத்தரபிரதேசத்திலும் சாகும்போது நமது உபரி விளைச்சலை நாம் அளித்தோம். அது நம் கடமை.
அந்த மனநிலையை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது மேலே சொல்லப்பட்ட கோஷம். உண்மையில் ஐம்பதுகளின் இறுதி வரை நீடித்த பெரும் பஞ்சத்தில் இருந்து, இன்னமும் கூட, பீஹாரும் உத்தரப்பிரதேசமும், வங்காளமும் மேலே எழவில்லை. கல்வி, உள்கட்டமைப்பு ஆகியவற்றில் அவை மிகவும் பின் தங்கியுள்ளன.
மாறாக தென்னகம் மிகச்சிறந்த போக்குவரத்து வசதிகள் காரணமாகவும், நமக்குள்ள சிறந்த துறைமுகங்கள் காரணமாகவும் தொடர் வளர்ச்சியை அடைந்து, இன்று வடக்கை விட முன்னணியில்
இருக்கிறது.
ஆனால், ஒரு கோஷத்தை கேட்கும்போது நாம் இந்த உண்மையை சிந்திப்பதில்லை. அந்த கோஷம் அடிவயிற்றிலிருந்து ஆக்ரோஷமாக எழுப்பப்பட்டால் அதை நம்மையறியாமலேயே நம்பத் தொடங்குகிறோம். திரும்பத் திரும்ப ஏமாந்தாலும் நமக்கு உண்மை
உறைப்பதில்லை.
இத்தகைய ஏமாற்று கோஷங்களை விட ஆபத்தானது வெறுப்பு கோஷம். ஒரு தரப்பின்மேல் வெறுப்பை உண்டு பண்ண வேண்டும் என்றால் அவர்களை ஒரு இழிசொல்லால், அரசியல்வாதிகள்
அடையாளப்படுத்துவார்கள்.
அந்த சொல்லை வெறுப்பு கொப்பளிக்கும் கோஷமாக ஆக்கி, கூச்சலிட்டபடியே இருப்பார்கள். ஏன் வெறுக்கிறோம் என்று தெரியாமலேயே அந்த கோஷத்தை கேட்பவர்களும் அச்சொல்லால் சுட்டப்படுபவர்களை வெறுக்கத் தொடங்கி விடுவார்கள்.
1994ல், ஆப்ரிக்க நாடான ரவாண்டாவில் ஒரு மிகப்பெரிய இனக்கலவரம் அரசியல்வாதிகளால் துாண்டி விடப்பட்டது. டுட்ஸி, ஹூடு என்னும் இரு இனங்களுக்கு இடையே அரைநுாற்றாண்டாக இனக்காழ்ப்பு உண்டு.
வெள்ளையரால் உருவாக்கப்பட்டது அந்த வெறுப்பு. அதை அரசியல்வாதிகள் வளர்த்தனர். டுட்ஸிக்களும் ஹூடுக்களும் இருவேறு இனத்தவர் என்று அவர்களையே நம்பவைத்தனர்.
ஆனால், நுாறாண்டுகளுக்கு முன்புவரை, டுட்ஸிக்கள், ஹூடுக்களாகவும்; ஹூடுக்கள், டுட்ஸிக்களாகவும் மாற வாய்ப்பிருந்தது. கொள்வினை கொடுப்பினை இருந்தது.
கலவரத்தில் நுாறே நாட்களில், மூன்று லட்சம் பேர் கொன்று குவிக்கப்பட்டனர். அத்தனை அழிவையும் உருவாக்கியது ஒரு வார்த்தை. ஹூடுக்கள், டுட்ஸிக்களை கரப்பாம்பூச்சிகள் என்று அழைத்தனர். திரும்பத் திரும்ப அந்த வார்த்தையை எல்லா மேடைகளிலும் சொன்னார்கள். ஊர்வலங்களில் கோஷம் போட்டார்கள்.
அந்த வார்த்தை எதை சுட்டுகிறது? கரப்பான்பூச்சி அருவருப்பானது. நோய் பரப்புவது. ரகசியமாக பரவுவது. எவ்வளவு அழித்தாலும் அழியாதது. அந்த வார்த்தையே, டுட்ஸிக்கள் மேல், ஹூடுக்கள் மனதில் கடுமையான கசப்பை உருவாக்கியது. அவர்கள் அதை யோசித்துக் கூட பார்க்கவில்லை. வன்முறை வெடித்த போது டுட்ஸிக்களை கொன்று அழித்தார்கள்.
கொலை செய்து வெறி நடனமிட்டவர்கள் பெரும்பாலும் இளைஞர்கள். டெர்ரி ஜார்ஜ் இயக்கிய, 'ஓட்டல் ரவாண்டா' என்னும் அமெரிக்க சினிமாவில் அந்த அழிவை நாம் காணலாம்.
இங்கும் அரசியல் களத்தில், அவ்வாறு பொய்யை திரும்பத் திரும்ப சொல்லி நிறுவும் கோஷங்கள் எழுப்பப்படுகின்றன. வெறுப்பை நிறைக்கும் சொற்கள்
உருவாக்கப்படுகின்றன.

நன்றி : தினமலர்
http://www.dinamalar.com/news_detail.asp?id=1502588
No comments:
Post a Comment